Sinhala (Sri Lanka)English (United Kingdom)
Press Release

2011.03.22 அன்று சிலாபம் சுகாதார மருத்துவ அதிகாரியின் பிரிவில் ஒரு நோய்த்தடுப்பு ஊசியுடன் சமாந்தரப்பட்டு ஏற்பட்ட பிள்ளையின் இறப்பு

(DTP-HepB-Hib) தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக் கட்டுப்பாட்டியலாளரிடம் இருந்து சுகாதார அமைச்சின் நோய் பரவுகை கட்டுப்பாட்டியல் அலகிற்கு, 2011 மார்ச் 22 ஆம் திகதி ஒரு அறிக்கையொன்று கிடைக்கப் பெற்றது.

இச்சம்பவம் குறிதது, இக் குழந்தைக்கு மாற்றமுடியாத பிறப்பிலிருந்தான இதய நோய் உள்ளது என்பது குழந்தையின் நோயியல் நிபுணரால் நோய் இனங் காணப்பட்டுள்ளதாகவும், அது அதன் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பதுடன், அதனது வாழ்வுக்காலம் குறுகியது எனவும் இந் நிலைமைக்கு மாற்று பரிகாரம் இல்லையென அறிவிக்கப்பட்டதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகள் தெரிவித்துள்ளன. ஆனாலும் குழந்தைக்கு சாதாரண கைக்குழந்தைகள், சிறுவர்களுக்கான நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் நோய்த்தடுப்பு செய்ய முடியாது என குழந்தையின் பெற்றோருக்கு வைத்தியர்கள் தெரிவித்திருந்தார்கள். இதன் பிரகாரம் அக் குழந்தையானது பிறப்பின்பொழுது BCG கொடுக்கப்பட்டுள்ளதுடன், குழந்தைக்கு இரண்டு மாதம் இருக்கும்பொழுதே pentavalent (பென்ரவலன்ற்) தடுப்பூசியின் முதலாவது கொடுப்பு கொடுக்கப்பட்டது. அதனால் எந்த வித பாதக தாக்கங்களும் அறிக்கையிடப்படவும் இல்லை. குழந்தைக்கான இரண்டாவது pentavalent தடுப்பூசி ஆனது 2011.03.22 அன்று ஏற்றப்பட்டது.

பிறப்பு ரீதியாக இருதய நோய் உள்ள பிள்ளைகளானவை ஏற்றுக்கொள்ளப்பட்ட தேசிய மற்றும் சர்வதே நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களின் கீழ் வெற்றிகரமாக நோய்த்தடுப்பு செய்யப்படுவதுடன் உலக சுகாதார நிறுவனமானது அவ்வண்ணமான பிள்ளைகளுக்கு நோய்த்தடுப்பை நிறுத்துவதை சிபார்சு செய்யவும் இல்லை. விஞ்ஞான ரீதியாகவும் கூட ஆரோக்கியமான பிள்ளைகளுக்கு நோய்த்தடுப்பு செய்யுவதுடன் ஒப்பிடும் இடத்து இவ்வண்ணமான பிள்ளைகளுக்கு நோய்த்தடுப்பு செய்வதானது மிகவும் பொருத்தமானதாகும். ஏனெனில் நோய்களுக்கு எதிரான நோய்த்தடுப்புகளை இவ்வண்ணமானவர்கள் மிகவும் அந் நோய்களால் தாக்கப்படக்கூடியவர்களாக இருப்பார்களாகையால் வழங்க வேண்டியுள்ளது. இவ் இறப்புக்கு மீதான ஒரு பூரணமான விசாரணையானது சிலாபம் நீதி மருத்துவ அதிகாரியின் வழிகாட்டுதலின் கீழ் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் கைக்குழந்தை இறப்பானது 1000 பிறப்புக்களுக்கு 11 என்ற மிகக் குறைந்தளவில் உள்ளதுடன், அவ்வண்ணமான இறப்புக்களின் தொகை வருடாந்தம் 4000 ஆகவும் உள்ளது. அதாவது இது ஒரு நாளைக்கு 10-11 இறப்புக்களைக் குறிக்கிறது. இதன்பிரகாரம் பல்வேறு நோய்களின் நிமித்தமாக தீவு பூராகவும் 10 – 11 பிள்ளைகள் இறக்கின்றனர். அவ்வாறானதொரு இறப்பானது ஒரு நோய்த்தடுப்பு ஏற்றும் நிகழ்வுடன் இணைந்து நடைபெறலாம். தேசிய நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்தி்ட்டத்தின் கீழ் 7 மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கைச் சிறுவர்கள் வெற்றிகரமாக நோய்த்தடுப்பு செய்யப்படுவதை இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் 11 இறப்பை ஏற்படுத்தும் நோய்களிலிருந்து, ஏற்படக்கூடிய 50,000 மேல் ஏற்படக்கூடிய இறப்புக்கள் வருடாந்தம் தடுக்கப்படுகிறது.

ஆகவே உரிய விஞ்ஞான ரீதியான விசாரணைகள் இன்றி யாரும் உடனயடியாக தடுப்பு மருந்து ஏற்பட்ட இறப்பானது அதனாலே ஏற்பட்டது என யாரும் முடிவுக்கு வர இயலாது. இதன் பிரகாரம் இவ்வாறானதொரு இறப்பை நோய்த்தடுப்பு ஏற்பட்டதால் ஏற்பட்ட ஒரு விபத்து என பெரிதுபடுத்தி காட்டுவதானது இலங்கைத் தேசிய நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்திலே ஒரு பாரதூரமான எதிர்த்தாக்கத்தை உண்டாக்குவதுடன், அவற்றை பயன்படுத்துபவருடனும் பாரிய கருத்து தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகவே தங்களின் ஊடக நிறுவனம் மற்றும் செய்தி அறிக்கையிடல் என்பன இவ் நிகழ்வை வெளிப்படுத்தும்பொழுது சுகாதார அமைச்சால் நடத்தப்படும் தேசிய நோய்த்தடுப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வைத்திருக்கச் செய்யும் விதத்தில் பொறுப்புணர்வுகளுடனும் தொழில்வாண்மை ரீதியான அற நடைமுறைகளுடனும் நடந்து கொள்வதையிட்டு நான் எனது பாராட்டைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

வைத்தியர். பபா பலிகவர்தன
பிரதம நோய்பரவுகை கட்டுப்பாட்டியலாளர்
23.03.2011

திங்கட்கிழமை, 24 அக்டோபர் 2011 07:55 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

புதிய விடயங்கள்

Latest Events on Corona
உள்ளடக்கம் மொழிபெயர்க்கப்படவில்லை.

COVID - 19 Daily Situation Report

 


COVID - 19 Situation Sri Lanka - Epidemiological Summary

COVID - 19 Vaccination Summary

 

 

 

 

COVID-19 Death Analysis - (5-18) Age group

Preparation Pfizer Vaccine

Read More About COVID - 19

Provisional Clinical Guidelines on COVID-19
COVID - 19 Hospital Preparedness Final
To minimize COVID - 19 in the country


SL - TL 2019


Timor Leste - Sri Lanka twining agreement thematic area 3 - 2019

 

 

 

CKDu Study 2017


Epid / WHO / NSF CKDu Study 2017
Health and Emergency Response - Flood and landslide 2018

 

 

Dengue

 

Advice's for patients with Dengue Fever who are on ambulatory care ( Sinhala / Tamil / English)
Printable versions (Sinhala/Tamil/English)
Triage of fever patients with suspected dengue and criteria for admission
நிகழ்வுகளின் நிரல்

27-06-2011 to 29-06-2011 : எல்லா பதுளை மாவட்ட அரச சுகாதார களப் பணியாளர்களுக்குமான தடுப்பூசி பாதுகாப்பு மீதான பயிற்சி.

ஏனையவை

செய்தி
நோய்க் கண்காணிப்பு இணைய இணைப்பிற்குச் செல்கிறது.

நடைமுறை H399 (தொற்றுநோய்களின் வாராந்த தொகுப்பு) அடிப்படையிலான நோய்க் கண்காணிப்பு முறைமையானது இலங்கையின்...

மேலும் வாசிக்க

பத்திரிகைக் குறிப்பு


தடுப்பு தடுப்பூசி ஏற்பட்ட சில மணித்தியாலங்களில் ஐந்து மாதக் குழந்தையொன்று இறந்து விட்டதாக, புத்தளம் பிராந்திய நோய்ப்பரவுகைக்...

மேலும் வாசிக்க

© 2011 தோற்று நோய் விஞ்ஞான பகுதி - முழுப் பதிப்புரிமையுடையது
நிபந்தனைகள்
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது